குணமளிப்பவரே

அவர், “உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்கு நீ அக்கறையுடன் செவிசாய்த்து, அவர் பார்வையில் நலமாகத் தோன்றுவதைச் செய்து, அவர் கட்டளைகளைப் பின்பற்றி, அவர் சட்டங்கள் அனைத்தையும் கைக்கொண்டால், நான் எகிப்திற்கு வரச்செய்த கொள்ளை நோய்களை உன்மேல் வரவிடமாட்டேன். ஏனெனில் நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர்” என்றார். 

விடுதலைப் பயணம் 15-26

ஆண்டவர் சொல்கிறார், நாம் அவருடைய குரலுக்கு கீழ்ப்படிய வேண்டும். அவருடைய பார்வையில் நலமானதை செய்ய வேண்டும். அப்படி அவர் குரலுக்கு செவிமடுத்து நல்ல வாழ்க்கை வாழ்ந்தால் நம்மை நோய் நொடி இல்லாமல் தீங்கின்றி காப்பார்.  அப்படியே ஏதாவது நம்மை ஆட்கொண்டாலும், அவர் நம்மை குணமாக்கி பாது காப்பார்.  அவர் சுகம் கொடுக்கும் கடவுள்.  எகிப்தியருக்கு வந்த எந்த வாதையும் இஸ்ரேல் மக்களை பாதிக்கவில்லை.  ஆண்டவர் அவர்களை காத்தார். நம்மையும் காப்பார். குணமாக்குவார். 

காப்பார் அவர் காப்பார். காத்தவர் இனியும் காப்பார். இன்றும் என்றும் என்றென்றும் காத்திடுவார். கலங்காதே மனமே.

 

அன்பின் ஆண்டவரே, எங்களுக்கு குணம் அளித்து பாதுகாத்தருளும். நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரையும்  உம் திருக்கரங்களால் ஆசீர்வதித்து குணமளித்து காத்தருளும்.  பூரண சுகத்தை தாரும்.  ஆண்டவரே எங்களையும் எங்களை சார்ந்தவர்களையும் உமது சிறகுகளின் நிழலில் மூடி காத்தருளும்.  ஆமென்.

Add new comment

4 + 2 =