கடவுளின் போர்வீரன் (Dad's Warrior)

லெட்டர்ஸ் டு காட் (Letters to God), கடவுளுக்குக் கடிதம் என்ற ஒரு திரைப்படம் வெளியானது. அது உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் வந்தது. டைலர் என்ற ஒரு சிறுவன், தீவிர நோயினால் மருத்துவர்கள் கைவிட்ட நிலையில் மருத்துவசிகிச்சைப் பெற்றுக்கொண்டிருப்பவன். தான் விரும்பியதையெல்லாம் கடவுளுக்கு ஒரு கடிதமாக எழுதுகிறான். அதை தபால் பெட்டியில் போடவும் செய்கிறான். அந்த கடிதங்கள் தபால் அலுவலகத்தில் சேர்த்துவைக்கப்படுகின்றது. ஏனென்றால் கடவுளுக்கு வருகின்ற கடிதத்தை எங்கு அனுப்புவது என்று யாருக்கும் தெரியவில்லை. 

அவன் மகிழ்ச்சியானவனாகவே இருந்தான். அவனை தன் வயதினர் எல்லாம் கேலி செய்தபோது அவன் சோர்ந்துவிடுகின்றான். தன் தோழின் தாத்தாவிடம் அவன் அதை வருத்தத்துடன் சொல்கிறான். அவர் அவனைப் பார்த்துச் சொன்னார்: டைலர் நீ கடவுளின் போர்வீரன். உன் வாழ்க்கையைப் பார்க்கின்றபோது, அவர்கள் பொறாமைப்படுகிறார்கள். நீ இந்த நிலையிலும் இப்படி மகிழ்ச்சியோடு இருக்கிறாய். அவர்களுக்கு எல்லாம் இருந்தும் அவர்களால் மகிழ்ச்சியாக இருக்கமுடியவில்லை என்பதால் உன்னைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள். வாழ்க்கையில் உண்மையோடும் நேர்மையோடும் தொடர்ந்துஓடு. உன் வாழ்க்கை பலருக்கும் உந்துசக்தியாக இருக்கும். ஏனென்றால் நீ கடவுளின் போர்வீரன். இந்த வார்த்தைகள் அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

அவனுடைய கடைசிப் பயணத்தின்போது, அவனுடைய கடிதங்கள் எல்லாவற்றையும் அந்த போஸ்ட்மேன் திறந்துப்பார்க்கின்றார். அந்த கடிதங்களில் அவனைச் சுற்றியுள்ள அனைவரைப் பற்றியும், அவர்களுக்குக் கடவுள் என்ன செய்யவேண்டும் என்று அவன் விரும்பியதை எழுதியிருக்கின்றான். 

போஸ்ட்மேன் அந்த அந்த நபர்களிடமே அந்த கடிதங்களைச் சேர்க்கின்றார். அவன் விரும்பியவாறு பலருக்கும் கடவுளின் இரக்கம் கிடைத்திருந்தது. எனவே அவனுடைய இறப்பிற்குப் பின், அவன் பெயரில் டைலர் மெயில் பாக்ஸ் என்ற ஒன்றை அமைத்தார்கள். ஒவ்வொருவரும் கடவுளுக்கு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்கள். தங்கள் ஆழ்மனதில் இருக்கும் மாபெரும் சக்தியை நாடினார்கள். 

இதனால் பலரும் குணம்பெற்றார்கள். அதற்கான சாட்சியங்கள் இந்த படத்தின் இறுதியில் வெளியிட்டுள்ளார்கள். நீங்களும் நினைத்தால் நீங்கள் நம்பியிருக்கும் கடவுளை நாடினால், உங்கள் ஆழ்மனதின் சக்தியை உரசிப்பார்த்தால், நீங்கள் விரும்பியது உங்களுக்குச் சாத்தியமாகும். ஏனென்றால் நீங்கள் கடவுளின் போர்வீரர்கள் (Dad's Warrior).

Website: https://tamil.rvasia.org

Facebook : http://facebook.com/VeritasTamil

Twitter : http://twitter.com/VeritasTamil

Instagram: http://instagram.com/VeritasTamil

SoundCloud: http://soundcloud.com/VeritasTamil

**for non-commercial use only** 

Add new comment

7 + 12 =