இறை ஊழியர் பெலீஸ் தந்தார்தினி - Felice Tantardini - October 14

சாதாரணமானவற்றில் அசாதாரணத்தை நம்பிக்கையினால் எண்பித்துக்  காட்டியவர். இத்தாலியில் லெக்கோ மாகாணத்திலே, வடக்கு மிலாணிலே, இந்ரோபியோ எனுமிடத்தில் 1898 ஜனவரி 28 இல் பிறந்தவர். முதல் உலகப்போரில் நாட்டுக்காய் போரிட்ட பொழுது ஆஸ்திரியா அங்கிரிய நாட்டால் பிணைக்கைதியாகப்பட்டு சிறையில் இருந்தபொழுது அங்கிருந்து வெளியேறி பி ஐ எம் இ என்றழைக்கப்படும் மறைப்பணி சபையிலே 1921இல் தன்னை இணைத்துக்கொண்டவர். 1922 இல் அந்த சபையால் இவர் பர்மாவிற்கு அனுப்பப்பட்டார். அன்றிலிருந்து ஒரே ஒரு முறை மட்டுமே அவர் தன்னுடைய சொந்த நாட்டிற்கு சென்று வந்தார். தன் வாழ்நாளெல்லாம் தன் பணி தளத்திலேயே செலவிட்டவர்.

இவருடைய சிறப்பு என்ன என்றால், நற்செய்திப் பணியில் தன்னுடைய சகோதர சகோதரிகளுக்கு நம்பிக்கையில் திளைத்து மனத்திலே தலைத்திருந்ததே. வாழ்க்கையை நம்பிக்கை என்கின்ற கட்டத்திற்குள் காணச் செய்தவர். மனிதனுடைய எண்ணங்களையும் சிந்தனைகளையும் தாண்டி கடவுளின் பார்வையிலே ஒவ்வொருவரையும் சகோதர சகோதரியாக பார்த்து நற்செய்திப் பணியை செய்தவர். கடவுளும் அன்னைமரியாவுமே இவருடைய உருவாக்கத்தில் மிக முக்கிய பங்கு வகித்தனர்.

இவருடைய நம்பிக்கை இறை வார்த்தையாலும், ஜெபத்தாலும், அருட்சாதனங்களாலும்  இன்னும் அதிகமாய் ஆழமாய் பாய்ந்தது என்றால் அது மிகையாகாது. ஒருபோதும் எதை குறித்தும் தன் கஷ்டங்களை குறித்தும் கூட குறை கூறாத ஒரு மனம். இனிமையான நம்பிக்கையும், ஆழமான தியானத்தையும், நற்கருணை ஆராதனையில் ஒவ்வொரு நாளும் தன்னுடைய நேரத்தை செலவிட்டவர்.  இவரை ஜெபமாலை இல்லாமல் பார்ப்பது மிகவும் அரிது.

இவருடைய இறை அன்பை மனிதத்தில் வெளிப்படுத்துகின்ற தளத்திற்கு பர்மாவில் இருக்கின்ற ஒவ்வொரு அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் எடுத்துக்காட்டு என்றால் அது சாலப் பொருந்தும். இறை பணிக்காக தன்னை முழுமையாய் ஒப்படைத்தது இவருடைய மற்றொரு சிறப்பு. தன்னுடைய ஆயரும் குழும தலைவரும் எங்கெல்லாம் செல்லுமாறு சொல்கிறாரோ அங்கெல்லாம் தடையேதும் சொல்லாமல் விரைவாய் சென்று பணி செய்தவர்.

இவர் பிரயப்பட்டு  செல்கின்ற இடம் காடுகளில் இருக்கின்ற மக்கள்.  நகரத்து மக்கள் தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால் காடுகளில் இருக்கின்ற மக்களுக்கு தேவையானதை நாம் சென்று பார்த்து கொடுத்து வர வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பார். அவர்களுக்காக சலிக்காமல் எவ்வளவு தூரம் என்றாலும் சென்று பணி செய்கின்ற ஒரு மனதை பெற்றிருந்தார்.

மக்களால் இவர் பெரிதும் விரும்பப்பட்டாலும் இவர் எளிமையாகவே தன்னுடைய வாழ்நாளை செலவிட்டார்.

இப்படி இருக்கின்றாரே இவருக்கு வலிகள் எதுவும் இல்லையா என்று கேட்டாள், நிச்சயமாக இவருடைய வலியையும் வேதனையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

முதல் உலகப்போரில் குண்டுகள் முழங்க, பிணைக் கைதியாக சிறையில் இருக்க, தப்பித்து வேறு ஒரு நாட்டிற்கு மறை பணிக்கு  வந்து, அந்த இடத்திலேயே இரண்டாம் உலகப்போர் நேரத்திலே

ஜப்பானும் சீனாவும்  குண்டு மழை பொழிய, ஒவ்வொரு பிரஜையும் உயிருக்கு பயந்து வாழ்ந்து கொண்டிருந்த நேரத்தில்,

இவருக்கும் உயிர் பயமும் உண்டு பிறரை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டு, தன் உயிரை துச்சமென வைத்து,  பிறரை காப்பாற்றிய தருணங்களை என்னவென்று சொல்வது.

எந்த நேரத்திலும் உயிர் போகலாம் என்றிருந்த நேரத்திலும் கூட தன் மக்களுக்காய் என்று இருந்தவர் இந்த நபர்.

வயோதிகம் உடல்நலமும் இவரை வாட்டிய பொழுதும்,  தன்னால் பிறருக்கு எந்த சிரமமும் தரக்கூடாது என்று  எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தவர்.

மலைபோல நம்பிக்கையையும்,  விசுவாசத்தையும்  ஜெபத்தையும் தனதாக்கிக் கொண்டவர்.

எந்த நேரத்திலே உயிருக்கு பயம் என்கின்ற  நேரத்திலும் கூட நம்பிக்கைக்கும், கடவுள் அன்புக்கும் எடுத்துக்காட்டாய் இருந்தவர் இவர்.

தன்னுடைய 93 ஆவது வயதிலே, 1991 மார்ச் 23 அன்று அவர் வேண்டிக் கொண்டதை போன்று சனிக்கிழமை நாளிலே மாதாவுடைய நாளிலே இறைவனடி சேர்ந்தார்.

ஒரு துறவற சகோதரனாகவே தன் வாழ்நாளை செலவிட்டவர்.

இன்று தந்தை கடவுளின் நெஞ்சத்துக்கு நெருக்கமாய் தான் அன்பு செய்த ஒவ்வொரு சகோதர சகோதரனுக்கும் மன்றாட்டுகள் சொல்லிக் கொண்டே இருப்பவர்.

தனக்கு எத்தனை வலிகள் இருந்தாலும் அதை பொறுத்து கொண்டு பிறருக்கு அன்பை வெளிப்படுத்திய விதம் சாதாரணத்தில் அசாதாரணம்.

உயிருக்கு பயம்வந்த நேரத்திலும் கூட கடவுள் மீது நம்பிக்கை வைத்து வாழலாம் என்று எடுத்துக்காட்ட வாழ்வை வாழ்ந்தது சாதாரணத்தில் அசாதாரணம்.

நாட்டை விட்டு வந்து பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த நாட்டுக்கு செல்ல விரும்பாது இங்கேயே நற்செய்தி பணிக்காய் தங்கிவிட்டது சாதாரணத்தில் அசாதாரணம்.

நற்செய்திப்பணிக்காய் நாம் என்ன செய்யலாம்?

Add new comment

8 + 0 =