ஆயர் ஜீன் கஸ்சைங் - Bishop Jean Cassaigne

பிறப்பு: 1895 ஜனவரி 30; ஊர்: பிரான்ஸ் தேசத்தில் க்ரிநாட் சுர் அக்டோபர்; சிறு வயதிலேயே தாயை இழக்க தந்தை அவர்களால் வளர்க்கப்பட்டு கிறிஸ்தவ பள்ளிகளின் சகோதரர்கள் அவர்களால் நடத்தப்பட்ட கல்லூரியிலே ஸ்பெயின் தேசத்தில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு 17 வயதில் வீட்டிற்கு வருகின்றார். அப்பாவிற்கு உதவியாக இருக்கலாம் என்கிற எண்ணத்திலே  இருக்கிறார் மறைப்பணிக்கு போகவேண்டும் என்கிற ஆர்வமும் இருந்தது.

அப்பா  என்ன செய்ய இருக்கிறாய் என்று கேட்கின்றார்,அவர்  நான் குருவானவராக செல்ல போகிறேன் என்று சொல்கிறார்.  சரி என்று சொல்கின்ற நேரத்தில் அங்கே அந்த நாட்டிற்கு போர் பிரகடனம் செய்யப்படுகின்றது. 19 வயதான நபர் நாட்டிற்காக கட்டாயமாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டு ராணுவ பணிக்காக ஐந்து ஆண்டுகள் அங்கேயே இருக்கின்றார். ஐந்து ஆண்டுகள் போரிலே அதிகாரியாக செயல்பட்ட பின்பு 1920 இல் குரு மடத்தில் சேருகிறார். 1925 டிசம்பர் 19 ஆம் நாளில் குருவானவராக திருநிலைப்படுத்தப்படுகிறார். பாரிஸின் வெளிநாடுகளுக்கு உண்டான மறைபணி சபையிலே இவர் குருவானவரானார்.

1976 ஏப்ரல் 6-இல் கைமோன் அனுப்பப்படுகிறார். அங்கே அவர்  கிறிஸ்தவ சமூகத்தை வளர்ப்பதற்காக வியட்நாம் மொழியை கற்றுக் கொள்கிறார். பின்பு அங்கேயே மக்களுக்கு பணியும் செய்கின்றார். அடுத்த ஆண்டே அவரது ஆயரால் டிஜிரிங் என்னும் ஓர் மலை இடத்திற்கு அனுப்ப படுகின்றார். அங்கே ஒரு கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இவருக்கு பணிக்கப்படுகின்றது. அந்த இடம் ஸ்ரீ எனப்படும் உள்ளூர் மக்களால் நிரம்பியிருந்தது. இந்த இடம் கோஹொ என்றும் அழைக்கப்பட்டது. அந்தக் காலகட்டம் வியட்னாம் மக்களால் இல்லா இடங்களும் நிரப்பப்படா ஒரு தருணம்.

இவருக்கு இப்பொழுது தரப்படுகின்ற பணி புதிய இடம். புதிய மொழி. புதிய கலாச்சாரம் கொண்டது. அவற்றையும் இவர் கற்றுக் கொண்டு அதிலே அகராதியையும் உரையாடல் பகுதியையும் புத்தகங்களாக வெளியிடுகின்ற அளவுக்கு புலமை பெற்றிருந்தார். அந்த நிலத்திற்கு உண்டான மக்கள் இதுவரை வெள்ளை நிறத்திலும் நீண்ட தாடி வைத்த நபரை கண்டதில்லை  ஆனதால் அவரை ஏற்றுக்கொள்ள தயங்கினர். சிறிது சிறிதாக அவர்களுடைய எண்ணங்களையும் மாற்றி அவர்களோடு ஒன்று  ஆனார். இவ்வாறாக இவர் மக்கள் மத்தியில் இருக்கின்ற பொழுது அவர்களின் துயரத்தையும் காணத் தவறவில்லை.

பல்வேறு தேவைகளால் காடுகளை விட்டு மக்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை. காடுகள் அவர்களுக்கு எல்லாமாக இருந்தது. ஆனால் இப்பொழுது அதை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. இதனாலேயே சரியான துணிமணிகள் இல்லை, உணவு இல்லை, உணவு பற்றாக்குறை என்று மேலும் தோற்று நோய்க்கும்  அதிகமாக ஆளாகி வருவதாகவும் அவர்கள் இருந்தார்கள்.

இதிலே இன்னும் குறிப்பாக தொழுநோயாளர் உடைய நிலைமை படுமோசமாக இருந்தது. குடும்பங்களால் கைவிடப்பட்டு, காடுகளில் அனாதையாக விடப்பட்டு,  எந்த ஒரு அரவணைப்பும் இல்லாமல், இறப்பு  மட்டுமே எப்பொழுது வந்து தங்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை தருமோ என்று ஏங்கி பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய துயரத்தையும் இவர் கண்டார். இவர்களுக்காக பணி செய்ய வேண்டும் என்று தீர்க்கமாக முடிவெடுத்தார்.

இதே நேரம் ஃபிரான்ஸின் நடுவோர் உரிமையாளர்கள்  இயக்கத்திலிருந்து இவருடைய மறைபரப்பு பணிக்கும் ஆயருக்கும்  ஓர் வேண்டுகோள் விடப்பட்டது. அங்கே ஓர் கிறிஸ்தவ சமூகம் அமைக்கப்பட வேண்டுமென்று. அந்த சபை அது தேவையானது என்பதை அறிந்து கொண்டு அவரை அங்கேயே இருக்க பணித்தது. இவரும் பெரு மகிழ்ச்சியாக அதே பகுதியில் ஒரு இல்லம்  அமைத்து மக்களுக்காக குறிப்பாக தொழுநோய் பதித்தவர்களுக்காய்  வேண்டி முழு வகையிலே முழுவீச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

1929 லேயே இந்த தொழுநோயாளர் இன் கிராமம் பெரிதாக வளர்ந்தது 100 பேருக்கு அங்கே ஏற்கனவே இருந்தார்கள். 1930 இல் இரு நபர்களுக்கு திருமுழுக்குக் கொடுத்து, நிறைய குடும்பங்களை கிறிஸ்தவர்களால் ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். ஊருக்கு மத்தியிலேயே ஒரு சிறு மருத்துவமனையும் இருந்தது. அது எல்லோருக்கும் தேவையான மருந்துகளை வாரத்திற்கு மூன்று நாள் வீதம் கொடுத்துக்கொண்டிருந்தது. இதற்கு மருந்துகளை கொடுத்தவரும் குருவானவர்.

இவர் தன் கரங்களாலேயே ஒரு கல்லறைத் தோட்டத்தை அமைத்து இறந்த தொழுநோயாளர்கள் கிறிஸ்தவர்களாக இறைவனில் இருக்க வேண்டும் என்றும் அவர்களை இங்கே அடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கல்லறை அமைக்கப்பட்டது. ஊரின் மறுமுனையில் இந்த தொழுநோயாளர்களுக்கு என்று ஒரு சிறு ஜெபக்கூடம் இருந்தது. அங்கே ஞாயிறு வழிபாடு, செபங்களும், மறைக்கல்வி கற்று கொடுக்கப்பட்டிருந்தது.

1935 இல் தொழு நோயாளிகளுக்கு என்று ஒரு தனிப்பட்ட எல்லாவற்றையும் கொண்ட ஒரு கிராமத்தை அவரால் உருவாக்க முடிந்தது. அதே ஆண்டு 26 பேருக்கு இவர் திருமுழுக்கு  கொடுத்திருந்தார். 1936 இல் அது 200 ஆக இருந்தது வளர்ந்திருந்தது.

1937 இல்  அன்பின் மகள்கள் சபை இவரை சந்தித்து 1938 இல் 4 அருட்சகோதரிகள் இவரோடு சேர்ந்து இந்த மக்களுக்காக பணியாற்ற தொடங்கினார்கள். 1941 இல் உரோமில் இருந்து இவருக்கு ஓர் தந்தி அனுப்பப்பட்டது. இவர் அந்த இடத்திற்கு ஆயராக உருவாக்கப்படுகிறார் என்று எல்லா வகையான கீழ்படிதலில்  இவர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார்.

மக்களோடு மக்கள் இனத்தின் ஆயராக இவர் உருவாக்கப்பட்ட பின்பு இவருடைய பங்கேற்பு அங்கே மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது என்பதை நாம் பார்க்கலாம். என்ன நேரம் வேண்டுமானாலும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி யார் வேண்டுமானாலும் எளிதில் ஆயரை சந்திக்கின்ற வகையிலே எல்லாம் மாற்றி அமைக்கப்பட்டது.

15 ஆண்டுகள் இவர் ஆயராக பணியாற்றிய நேரத்திலே இவர் மக்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இவர் மக்களோடு மக்களுக்காக என்று இருந்தார். ஜப்பானின் அபகரிப்பு நேரத்திலும் கூட பிரான்ஸ் வியட்நாம் போரில் கூட மக்களுக்காக மக்கள் பக்கம் நின்று அவர்களை காத்து அவர்களுக்கு வேண்டியதை கொடுத்துக்கொண்டிருந்தார்.

ஆயராக மக்களுக்கு பணியாற்றிக்கொண்டு இருந்தாலும் இவருடைய அடிமனதில் எப்பொழுதுமே தான் உருவாக்கிய அந்த தொழுநோயாளரின் கிராமத்திற்கு செல்ல வேண்டும் அங்கே அந்த மக்களோடு இருக்க வேண்டும் என்று ஆதங்கமாய் அவருடைய மனம் அடித்துக் கொண்டிருந்தது.

அங்கே ஏன் செல்லவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார் என்றால், அவர்களுக்கு தேவையான உதவிகளை கொடுக்கவும், ஆன்மீக உதவிகளை கொடுக்கவும், அந்த மக்களை மகிழ்ச்சியில் மக்களாக பார்க்கவும், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியும் காணவுமமமே. இது இவருக்கு பேரானந்தமாக இருந்தது.

அவர்களோடு ஒருவராய் எல்லா வகையிலும் பணியாற்றிய அவருக்கு அதே நோயும்  வந்தது. அவர்களுள் இவர் முழுவதுமாக ஒருவர் ஆகி விட்டார். தன்னுடைய நோய்வாயிலும், படுத்தபடியாகிவிட்ட நிலையிலும் கூட மகிழ்ச்சியை அவர் ஒருபொழுதும் விட்டு விடவே இல்லை. 1973 அக்டோபர் 31 ஆயர் ஆனவர் இறைவனடி சேர்ந்தார்.

இவருக்கு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடத்திலே ஒரு தொழுநோயாளர் இவ்வாறாக சொல்லி அதை நாம் வாசிக்கின்றோம். இது நம் மனதை உலுக்குகின்றதாக  அமைந்து இருக்கின்றது.

"ஓ தந்தை அவர்களே விண்ணகத்திற்கு உண்டான உண்மையான வழியை எங்களுக்கு நீர் காட்டு இருக்கின்றீர். இந்த தொழுநோயாளர் உடைய ஊர் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. நன்றி. எங்களுக்கு  இங்கே எதையும் குறைவு படவில்லை; உணவு, உடைகள், மருந்துகள், நீங்கள் எங்களுக்காக எல்லாவற்றையும் தேடி எங்களுக்கு கொண்டு வந்து கொடுத்தீர். அன்புக்குரிய தந்தையே எல்லா வகையிலும் நாங்கள் குறைவு பட்டவர்கள். எங்களால் முடிந்தது ஒன்றே ஒன்று நன்றி என்று உங்களுக்கு சொல்லுவது மட்டுமே, உமக்காக நாங்கள் இறைவனிடத்தில் ஜெபிப்போம் என்று சொல்வது மாத்திரமே. இன்று நாங்கள் நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்ததை வாழ்வாக விரும்புகின்றோம். நீங்கள் எங்களுக்கு அன்பு செய்ததை வாழ்வாக அதை எப்பொழுதுமே எரிந்து கொண்டிருப்பதாக இருக்க ஆசைப்படுகின்றோம்.

அன்புத் தந்தையே நீர் உயிரோடு இருந்த பொழுது எங்களில் ஒருவராக எண்ணப்பட ஆசையாய் இருந்தீர்.  எங்களோடு  ஒருவரும் ஆகிவிட்டீர்.  தொழுநோயை கூட எங்களோடு பங்குபெற்று, உங்களுக்கு மலேரியா  காய்ச்சலும் வந்தது, இப்பொழுது இறப்பில் கூட நீர், எங்களுக்காக கட்டிய இதே கல்லறையிலே.  உம்முடைய பிள்ளைகள் மத்தியில் இருக்க வேண்டும் என்று நீர் தெரிந்துகொண்டது ஆனந்தம்.

இது எங்களுடைய இறுதி சமர்ப்பணம். எங்களுக்காக இறைவனை மன்றாடும். ஒரு நாள் இறை இல்லத்தில் நாங்களும் உங்களை சந்திக்க ஆவலாய்  இருக்கின்றோம்.  அந்த அரசாட்சியில் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கின்றோம், என்று கூறி ஒரு பிடி மண்ணை இவருடைய சவப்பெட்டி மீது போட்டார் என்று நாம் வாசிக்கின்றோம்.

எங்கிருந்தோ வந்தார். மக்களின் துயரத்தை கண்டார். நீக்கினார். பணி செய்தார். உயரிய பணியில் இருந்தாலும் கூட எளிய மக்கள் மீது ஆர்வமாய் அவர்களுக்கு தேவைகளை நிறைவு செய்தார். அவர்களுள் ஒருவரானார். நோய்களிலும் அவர்களுள் ஒருவரானார்.  இவர் நற்செய்தி பணிக்கு ஒரு எடுத்துக்காட்டு.

நாம் என்ன செய்யலாம்?

Add new comment

12 + 2 =