அருளாளர் பேதுரு தோ ரோத் - Blessed Peter To Rot - October 19, 2019

அருளாளர் பேதுரு தோ ரோத், பாப்புவா நியூ கினியா வின் முதல் அருளாளர். நல்ல கணவர், நல்ல தகப்பன், தலைசிறந்த மறைக் கல்வியாளர். பப்புவா நியூ கினியாவின் நிலப்பரப்பு  நிறைய தீவுகள்,   மலைகளும் போக வர  சிரமமா இருக்கின்ற மலைப் பாங்கான பாதியோடு, 800 க்கும் மேற்பட்ட மொழிகளோடு பிரத்தியேக தன் நாட்டு  குழுக்களை கொண்டிருக்கின்ற ஓர் நிலப்பரப்பு.

1870 இந்த பகுதிகளுக்குமறைப் பணியாளர்களால் நற்செய்தி கொண்டுவரப்பட்டது. 1882ல்  இயேசுவின் திருஇருதய மறை  போதக சபை  அவர்களுடைய முதல் குழு மடுபிட் என்னும் இடத்திற்கு வந்தார்கள். இப்பொழுது அந்தப் பகுதி புதிய பிரித்தானிய தீவு என அழைக்கப்படுகிறது. எல்லோருடைய ஆச்சரியத்திற்கு வாய்ப்பாக அந்த ரகுனாய் ஊரின் உடைய தலைவர் ஆஞ்சலோ டோ பவ்யா,

ஊரறிய தான் கிறிஸ்தவத்தை கத்தோலிக்கத்தை பின்பற்ற இருப்பதாக அறிவிக்கிறார். அவருடைய மனைவி மரியா லா துமுல், 1912 லே பீட்டர் என்கின்ற  பிள்ளையைப் பெற்றாள். இவரே நம் நாயகன். ஆறு பிள்ளைகளில் மூன்றாம் பிள்ளையாய் பிறந்தவர். தந்தையானவர் எல்லாப் பிள்ளைகளும் திருமுழுக்குப் பெறுவதை உறுதி செய்தார்  தேவையான உண்மைகளையும் மறைக் கல்வியையும் கற்றுக் கொடுத்தார். தாயானவள் ஜெபிக்க கற்று கொடுத்தார்.

சிறுபிள்ளையாய் மறைப்பணியாளர்கள் பள்ளியில் பயின்று கொண்டிருந்தார்.  அப்பொழுது பேதுரு மிகச்சிறந்தவராய், கடின உழைப்பாளியாய், கிறிஸ்துவத்தில் அதிக ஈடுபாடு கொண்டவனாய் தன்னை வெளிப்படுத்தினான். அதேநேரம் இவர், பிறரைக் குறித்து சிந்திப்பவர் ஆகவும் உதவி செய்பவராகவும் இருந்தார். ஊர் தலைவரின் மகன் என்பதால் பிறரை இவருக்கு பணி செய்ய பனிக்காலம்  ஆனால் இவரே ஊரிலுள்ள பெரியவர்களுக்கு உதவி செய்வதும் பணி செய்வதும் தென்னை மரமேறி இளநீர் பறித்து கொடுப்பதும் என்று அவ்வளவு உதவியாக இருந்தார்.

1930 இலேயே பங்கு தந்தை யானவர் இவருடைய அப்பாவை  நோக்கி உன் மகனுக்கு குருத்துவ அழைப்பு இருப்பதைப் போன்று தோன்றுகிறது என்று கூற தந்தையானவர் மிகத் தெளிவாக என்ன சொன்னார் என்றால், இந்த பகுதியிலிருந்து குருக்களும்  துறவிகளும் உருவாவதற்கு நேரம் இன்னும் வந்தது போன்று தெரியவில்லை. ஒருவேளை இவரை மறைக் கல்வியாளராக ஆக்குவதற்கு நீங்கள் விருப்பம் கொண்டால் நான் சம்மதிக்கிறேன் என்று கூறினாராம். இது ஒரு ஞானம் மிக்க முடிவாக  தெரிகிறது.

அவர்களுடைய பகுதியான ஓசியான ஆவில் நிறைய மறைப்பணி செயல்கள் செய்யப்பட்டன. அங்கு மிக சொற்பமான மறைப்பணியாளர்கள் இருந்தார்கள். அதனாலேயே அந்த பகுதி இளைஞர்கள் நிறைய மறைக் கல்வியாலர்களாய்  இவர்களோடு சேர்ந்து பணியாற்ற ஊக்குவிக்கப்பட்டார்கள். தூய பவுல் கல்லூரியிலே பேதுரு சேர்ந்து தன்னையே இந்த புதிய வகையான வாழ்வுக்கு அர்ப்பணித்துக்கொண்டார். ஆன்மீக பயிற்சிகளாலும், பாடங்கள் ஆளும், உடலுழைப்பு ஆளும் இவர் நிரப்பப் பட்டார்.

அந்த பள்ளியானது பெரிய உழவு நிலத்தை கொண்டிருந்தது. அதை வைத்து  தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டிருந்தது. அதிலே பேதுரு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு உள்ள மாணவனாகத் திகழ்ந்தான்.  வேலையிலை கவனம், செய்யவேண்டியதை  குறிப்பறிந்து செய்வது என்று எல்லா வகையிலுமே ஒரு மகிழ்ச்சியான தோழனாய் திகழ்ந்தான். சண்டைகள் வரும்பொழுது சுமுகமான வார்த்தைகளைக் கொண்டு தீர்த்து வைப்பவனாய்  இருந்தான்.

அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் பெறுவது, தினந்தோறும் திவ்ய நற்கருணை வாங்குவது,  செபமாலை செபிப்பது என்று அவரும் சக தோழர்களும் கிறிஸ்தவத்திற்கு எதிரான தொல்லைகளிலிருந்து தங்களது நம்பிக்கையை காத்துக் கொண்டார்கள். இதன் வழியாக முதிர்ந்த கிறிஸ்தவர்களாகவும் அப்போஸ்தலர் ஆகவும் அவர்கள் உருவெடுத்தார்கள்.

1934 இல் பேதுரு மறைக்கல்வி போதிப்பவர் அதற்குண்டான திருச்சிலுவையைக் ஆயரிடமிருந்து  பெற்றுக் கொண்டார். அவருடைய ஊர் பிள்ளைகளுக்கு மறைக் கல்வியை கற்றுக் கொடுத்தார். நம்பிக்கையில் பெரியோருக்கு வளர அறிவுறுத்தல் கொடுத்தார். ஜெப கூடங்களை நடத்தினார். ஞாயிறு வழிபாட்டிலே மக்கள் பங்கேற்க உற்சாகம் ஊட்டினார். பாவிகளுக்கு நல்ல ஆலோசனை நபராகவும், அவர்கள் ஒப்புரவு அருட்சாதனம் பெற தயாரிப்பவர் ஆகவும் இவர் இருந்தார்.

தங்களுடைய பகுதியில் பில்லி சூனியமும் பிற வகைகளும் கிறிஸ்தவர்கள் மத்தியிலும் பரவி இருந்ததற்கு இவர் தனிப்பட்ட ஆளாய் மிக தீர்க்கமாய் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். 1936இல் பேதுரு பவுலா லா வார்பிட் எனும் பக்கத்து ஊர்  இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது ஒரு எடுத்துக்காட்டான கிறிஸ்தவ திருமணம். இவர் தன் மனைவிக்கு மிகுந்த மரியாதை செலுத்தினார் சேர்ந்து ஜெபித்தார். பிள்ளைகளோடு பக்தியாக நிறைய நேரம் செலவிட்டார்.

1942 இல் இரண்டாம் உலகப்போரின் நேரத்தில் ஜப்பான் இவர்களுடைய பகுதியை கைப்பற்றியது. கிறிஸ்தவத்தை போதிக்கின்ற ஒவ்வொரு குருவானவரும் துறவியரையும் ஓர் பகுதிக்கு கொண்டு வந்து முடக்கியது. ஓர் பொதுநிலை மனிதராக பேதுரு இருந்ததாலே தன் ஊரிலேயே தங்கி விட்டார். இதற்குப் பின்பு இவருக்கு நிறைய பொறுப்புகள் சேர்ந்தன.  ஞாயிறு ஜெபத்தை வழி நடத்துவது, கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் திருமணத்தை காப்பதிலும் திருமண வைபவத்தில் சாட்சியாய் இருப்பதிலும் இவருடைய பங்கு முக்கியத்துவமாக மாறியது. பிறந்த குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுப்பதும், மரித்தவர்கள் உடைய அடக்க சடங்கை முன்னின்று நடத்தும் என இவருடைய பணிகள் பெருகின. தன்னுடைய ஊர்காரர்களை காட்டிற்கு அனுப்பி அங்கே இருக்கின்ற மறைபணி குருக்களிடம் மறைமுகமாக திருவருட்சாதனங்கள் தடையின்றி பெற வைத்தார்.

துவக்கத்திலேயே ஜப்பானியர்கள் கிறிஸ்தவத்திற்கு முற்றிலுமாக எதிரானவர்களாக இல்லாது இருந்தாலும் நாளடைவில் கத்தோலிக்க ஆலயங்களை தீயிட்டுக் கொளுத்தினர். எனவே பேதுரு மூங்கில்களால்  ஒரு சிறிய ஆலயம் அமைத்து புனித பாத்திரங்களை  நிலத்திற்கு கீழ் ஓர் ரகசிய அறை அமைத்து பத்திரப்படுத்தி வைத்தார். இவர் இரவு நேரங்களில் கிறிஸ்தவர்களை சந்தித்து பலப்படுத்திக் கொண்டிருந்தார், ஏனென்றால் நிறைய ஒற்றர்களை ஜப்பானியர்கள் நியமித்திருந்தார்.

வுனுபோப் எனும் இடத்திற்கு இவர் அடிக்கடி சென்று வந்தார். அங்கே ஒரு குருவானவர் ஆயரின் அனுமதிப் பெயரில் திவ்விய நற்கருணைய  பேதுருவிடம் கொடுத்து அனுப்பி இறக்கும் தருவாயில் உள்ளோருக்கு வழங்க செய்தார். அது ஒரு சவால் நிறைந்த பணி, மாட்டினால் மரணம் நிச்சயம். நிறைய மக்கள், நிறைய மொழிகள், நிறைய கலாச்சாரங்கள் இவற்றிலிருந்து பாப்பா நியூகினியா மக்களை வென்றெடுக்க ஜப்பானியர்கள் பலதார ப் பழக்கத்தை அங்கீகரித்தார்கள். இதன் வழியாக மக்களை ஒன்று திரட்டி வென்றுவிட முடியும் என்று எண்ணினார்கள்.  நிறைய மக்கள் ஆசைக்காகவும் அரசினுடைய கொள்கை என்பதற்காகவும் மறுமணம் செய்து கொண்டார்கள்.

நம்முடைய நாயகன் பேதுரு மறைக் கல்வியாளர், இதற்கு ஒருபோதும்  ஒப்புக்கொள்ளவில்லை. கிறிஸ்தவ திருமணத்திற்கு உண்டான முக்கியத்துவத்தையும் மதிப்பையும் எடுத்துச் சொல்வதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன் என்றார். தன்னுடைய சொந்த சகோதரரே பலாத்காரத்திற்கு சென்றுவிட, மற்றொரு சகோதரனால் ஜப்பானிய வீரர்களிடம் பேதுரு காட்டிக் கொடுக்கப்பட்டார். அவருடைய பெயர் டடாமாய்.

பேதுருவினுடைய  மனைவி கிறிஸ்தவத்தை விட்டு விடுகிறேன் என்று பெயருக்கு சொல்லிவிட்டு வந்து விடுங்கள் என்று கேட்க, நான் தந்தை மகன் தூய ஆவியாரை மகிமைப்படுத்தும் அதை விட்டுவிடுவேனோ என்று சொல்லுகிறார். ஒருவேளை நான் இறப்பது ஆனாலும் அது நல்லதே, ஏனென்றால் என் மக்களிடையே கடவுளுடைய அரசாட்சிக்காக நான் மரிப்பேன் என்கிறார்.

பாப்பரசர் புனித இரண்டாம் ஜான் பால் இவ்வாறாக கற்பிக்கிறார், கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய அந்த ஒரு புரிதல் மிக முக்கியமானது. திருமண திருவருட்சாதனத்தினால் இனி அவர்கள் இருவர் அல்ல ஒரே உடல்.  இது கட்டாயமாக பல தாரத்திற்கு முற்றிலும் வேறுபட்டது. பலாத்காரம் என்பது கடவுளுடைய திட்டத்திற்கு முற்றிலும் எதிரானது.  கணவனுக்கும் மனைவிக்கும் மத்தியிலே அந்த பரிமாறுகின்ற  அன்பை  இது குறைத்து விடுகின்றது.

ஒருநாள் 1945ஆம் ஆண்டிலேயே பேதுரு பீன்ஸ் விதைகளை தன்னுடைய வயலில் விதைத்துக்கொண்டிருந்தபோது  ஜப்பானிய வீரர்களால் சிறைபிடிக்கப்பட்டு, ஜன்னல் இல்லாத அறையில் அடைக்கப்பட்டார். ஒரு சில நேரங்களில் அந்த கதவு திறக்கப்படும், அப்பொழுது இவர் சென்று பன்றிகளை பராமரிக்க வேண்டும். இவருடைய தாயும் மனைவியும் இவருக்கு உணவு கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை இவருடைய மனைவி அவர்களுடைய இரு பிள்ளைகளை அழைத்து வந்திருந்தால் மூன்றாவது பிள்ளைக்கு அவர் கர்ப்பமாக இருந்தார்.

மீண்டும் அவர் கிறிஸ்தவத்தை தந்துவிடுவதாக அறிவிக்க சொல்லி கேட்கின்ற பொழுது நான் கடவுளை என் மக்களுக்காக மகிமைப்படுத்த வேண்டும் என்று சொல்லி  தன்னுடைய மறைக்கல்வி பணிக்குண்டான  திருச்சிலுவையைக் எடுத்து வருமாறு கேட்டு அதை இறுதிவரை தன்னோடு வைத்துக் கொண்டார். ஒரு நாள் இவர் தன் தாய்க்கு இவ்வாறாக சொன்னாராம் நான் நோய்வாய் படவில்லை விரைவாக சென்று ஜெபி என்று சொன்னாராம். ஓர் ஜப்பானிய மருத்துவர் அழைக்கப்பட்டு இவருக்கு ஓர் ஊசி போடப்பட்டது. அடுத்த நாள் இவருடைய ஊருக்கு வந்து ஜப்பானிய வீரர்கள்,  இவர் உங்கள் மறைக் கல்வியாளர்,  இறந்துவிட்டார் என்று அறிவித்தார்கள்.

பேதுரு உன்னுடைய உறவினர் தருவா சென்று இறந்தது அவர்தான் என்பதை அடையாளம் காட்டுகின்றார். அவருடைய உடல் இவ்வாறாக இருந்தது. ஓர் சிவப்பு கைகுட்டை அவரது கழுத்தை சுற்றி இருந்தது. அவருடைய கழுத்து வீங்கியும் காயப்படும் இருந்தது. ஊசி போட்ட தழும்பு தெளிவாய் தெரிந்தது. அது ஒரு நிதானமாக ஆளைக் கொல்லும் பூச்சி மருந்து. அது மெல்ல மெல்ல நம்முடைய மறை  சாட்சியை கொன்று இருக்கின்றது. துடிக்க துடிக்க கொன்று இருக்கின்றது.

பேதுரு அவருடைய ஊரிலேயே அடக்கம் செய்யப்பட்டார். இன்று அது ஒரு திருப்பயண தளமாக இருக்கின்றது. இவரை காட்டிக்கொடுத்த சகோதரர் மனம் மாறி தன் சொந்த செலவிலேயே அந்த ஊருக்கு ஓர் ஆலயத்தை கட்டி கொடுத்தார். இவருடைய மரணத்தின் 50 ஆண்டுகளுக்குப் பின்பு அங்கே 12க்கும் மேற்பட்ட குருக்களும் துறவிகளும் அந்த ஊரிலிருந்து கத்தோலிக்கத் திருச்சபைக்காக பணியாற்ற சென்றிருந்தார்கள்.

திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் 1995-ஆம் ஆண்டு ஓசோனியாவை சந்திக்க வந்திருந்த பொழுது, பேதுரு தோ ரோத்யை அருளாளர் ஆக அறிவித்தார். அன்றே நிகழ்விலே திருத்தந்தை இவ்வாறாக மறையுரை ஆற்றினார். "கடவுளுடைய ஆவி இவருள் இயங்கியதால் பயமின்றி உண்மையை எடுத்துரைத்தார். திருமணத்தின் மேன்மையை பறைசாற்றினார். நீதி கேட்க படாமலேயே தண்டிக்கப்பட்டார்.  அமைதியாக மறை  சாட்சியாய் துன்பப்பட்டார்.

இயேசுவினுடைய பாதச்சுவடுகளை பின்பற்றினார்.  உலகத்திலே பாவங்களை போக்க வந்த ஆட்டுக்குட்டி, வெட்டுவோன் முன்பு கத்தாத செம்மறியாய், இருப்பினும் ஒரு கோதுமை விதையாய் நிறைய ஆசீர்வாதங்களையும் அறுவடையும் பபுவா நியூகினியாவில் உடைய திருச்சபைக்கு கொடுப்பவராக இருந்தார். இவருள் விளங்கிய கடவுளுடைய ஆவிக்கு நன்றி.  இவர் ஆணித்தரமாக திருமணத்தின் மேன்மையை உண்மையை பறைசாற்றினார்," என்று மறை உரையாற்றினார்.

நாம் என்ன செய்யலாம்?

Add new comment

2 + 0 =