Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
Blessed Pierre Claverie - அருளாளர் பியரே கிளவேரியே - October 20, 2019
பல்சமய உரையாடலுக்கு மாதிரி அருளாளர் பியரே கிளவேரியே. மனதை உருக்கும் ஒரு நற்செய்திப் பணியின் எடுத்துக்காட்டு. 2018 ஜனவரியில் திருத்தந்தை பிரான்சிஸ் இவரையும் அவரோடு சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவினரையும் அருளாளர்கள் என அறிவித்தார். அவர்களெல்லாம் யார் என்றால் பியரே க்ளவேரியே டொமினிகன் சபையைச் சார்ந்த அல்கேரியாவின் ஓரோனின் ஆயர். இவரே இறுதியாக கொல்லப்பட்டவர், ட்டாபிஸ்ட் முனிவர்கள் எழுவர், நான்கு ஆப்பிரிக்காவின் மறைப்பணியாளர்கள் ஒரு மரிஸ்ட் குரு, அவர்களோடு சேர்ந்து பல சேபைகளை சேர்ந்த துறவியர்கள். இவர்கள் எல்லோருமே 1994 இல் இருந்து 1996 வரை நடந்த ஓர் துன்பகரமான நேரத்திலே கொல்லப்பட்டவர்கள்.
இந்த நேரத்திலே 1.5 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள் காரணம் மதம் சார்ந்த வன்முறையும் அடக்குமுறையும். இவர்கள் எல்லோருமே அந்த சூழ்நிலையிலே விட்டு விட்டு ஓடிவிட வேண்டும் என்று இல்லாமல் நற்செய்திக்காய் கிறிஸ்துவினுடைய அன்பிற்காய் எதையும் எதிர்கொள்ளும் துணிவோடு சென்றதனாலேயே இவர்கள் மறைசாட்சிகள் என்று இன்று நம் முன் நிற்கிறார்கள்.
இதிலே குறிப்பாக நம் நாயகனை எடுத்துக்கொள்வோம் இவர் 1938இல் அல்கேரியாவில் பிறந்தார். அல்கேரியாவின் காலனி ஆதிக்க பகுதியில் பிறந்தவர். தன்னுடைய இளமையில் முழுக்க அந்த நாட்டில் இருந்தாலும் அரேபிய மக்களோடு இளைஞர்களோடு இவர் தொடர்பில் இருந்ததே இல்லை. "எனக்கு அரபு நண்பர்கள் இருந்ததே இல்லை. இந்த நேரத்திலேயே நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன் நாங்கள் இனவாதிகள் அல்ல வேற்றுமை பார்த்தவர்கள். இந்த நாட்டினுடைய அதிகபடியான எண்ணிக்கையுடைய மக்களை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை. அந்தப் பகுதிகள் நாங்கள் சுற்றுலா செல்ல, எங்கள் வாழ்க்கைக்கு பொருளாதார பக்கபலமாய் இருக்க மட்டுமே நாங்கள் உபயோகித்துக் கொண்டோம்.
அவர்கள் என்னுடைய தோழர்களாய் இருந்ததே இல்லை. நிறைய பிறரன்பைப் பற்றியும், கிறிஸ்தவ போதனைகளை நாம் கேட்டிருந்தோம், ஆனாலும் இவர்கள் என் அருகில் இருப்பவர்கள் என்பதை நான் உணர்ந்ததில்லை. இதை நான் உணர்ந்து கொள்ள, இந்த குமிழ் உடைய, காலனி என்கின்ற இந்த குமிழ் உடைய ஒரு போர் தேவைப்பட்டது.
இவர் லே ஸ்வொல்கொயர் ல் படித்தார். இவருடைய ஆசிரியர் சிறந்த தோமினிக இறைஇயலாளர். அவருடைய திருச்சபை பற்றிய பணி இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பெரிய உதவியை செய்தது. யூ கோங்கர், மரிய டொமினிக் ச்சேனு, மற்றும் அந்திரே லெய்ஜி இவர்களும் அவருடைய மாணவர்களே. இவர்களுடைய குரல் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் பலமாய் ஒலித்தது.
நல்ல திடமான அறிவுபூர்வமான ஆன்மீக பயிற்சியை பெற்று 1967-இல் பட்டம் பெற்றவர். இதுவே பின்னர் இவருக்கு பேருதவியாக அமைகிறது. இவருடைய கடிதமொன்று மிகத் தெளிவாய் இவருடைய ஆன்மீக ஆழத்தை கூறுகின்றது, "இன்று காலையில் என்னுடைய ஜெபத்திலே நான் மூவொரு இறைவனை கண்டறிதலை முடிவு செய்தேன். நிறைய நேரங்களில் இது ஓர் இறையியல் தத்துவம் தர்க்கமாகவே நின்றுவிடுகிறது.
இது கிறிஸ்தவத்தின் கருப்பொருள் என நான் நம்புகின்றேன். இயேசு அவருடைய வாழ்வையும் படிப்பினைகளையும் அவருடைய திருச்சபையும் தாண்டி கடவுளை நமக்கு வெளிப்படுத்துகிறார். கடவுளை அப்பாவாக மட்டுமல்ல அதற்கு ஒரு உருவகத்தையும் கொடுக்கின்றார். அந்த நிகழ்வும் அன்பிலே தங்கியிருக்கின்ற ஒவொருவருமே தந்தை மகன் தூய ஆவியாருள் இணைக்கப் படுகிறார்கள்" என்று 1959 மேமாதம் எழுதுகிறார்.
குருவானவராக அருட்பொழிவு செய்யப்பட்ட இவர், சிறிய தொனிக்க குழுமத்தில் அல்ஜீரியாவில் மகிழ்ச்சியோடு சேர்கிறார்.கருதினால் துவேள் இதனை வழிநடத்துபவர் ஆகவும் இருக்கின்றார். இஸ்லாமிய மக்கள் அதிகமாக இருக்கின்ற இடத்திலேயே ஓர் மாறுபட்ட திருச்சபை இருக்கவேண்டுமென்று அதற்காக நிறைய பங்களிப்புகளை செய்தவர் இந்த கர்த்தினாள்.
இதற்காகவே நம் நாயகன் அரபு மொழியை கற்றுக்கொண்டார். பிறருக்கும் கற்றுக் கொடுத்தார். எல்லாவற்றையும் தாண்டி இவர் அல்ஜீரிய மொழியும் கற்றுக் கொண்டார். இவர் அல்ஜீரியா மக்களோடு நல்ல உறவு நிலையை ஏற்படுத்தியிருந்தார். ரத்த சரித்திரம் கொண்ட போரை 1954 முதல் 1962 வரை கண்டிருந்த அல்ஜீரியா தன்னை மீண்டும் கட்டியெழுப்ப தொடங்கியது.
அந்தக் காலகட்டத்திலே நிறைய செய்ய வேண்டியிருந்தது. தலைவர்களை உருவாக்குகின்ற கல்விப்பணி என் பலப்பணிகள். நம் நாயகன் இதிலே நிறைய பங்களிப்பு செய்தார். குருக்களையும் துறவியர்களையும் நிறைய பங்களிப்பு செய்ய ஏற்பாடு செய்தார். பிறரன்பு பணிகளின் வழியாய் இந்த நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல உதவி செய்தார். இது ஓர் மகிழ்ச்சியான காலகட்டம்.
இவர் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். அந்த நிகழ்வில் குழுமியிருந்த ஒவ்வொருவரையும் அன்போடு வரவேற்று நண்பர்களையும் வரவேற்று இவ்வாறாக ஒரு உரையை நிகழ்த்தினாராம். "எனது அல்ஜீரியாவின் சகோதரர்களே! நண்பர்களே! நான் உங்களுக்கு கடமைப் பட்டிருக்கின்றேன். நானாக இங்கே நிற்பதற்கே நீங்களே காரணம். என்னை வரவேற்றீர்கள், எனக்கு பக்கபலமாய் இருந்தீர்கள், உங்களுடைய நட்பின் வழியாய்.
என்னுடைய அல்ஜீரியாவை கண்டுபிடிக்க நீங்கள் உதவியதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். இது என் நாடாக இருந்தாலும் இதிலே நான் ஓர் வேற்று நாட்டவனாய் என் இளமையிலிருந்தே வாழ்ந்து கொண்டிருந்தேன். உங்களோடு சேர்ந்து அரபு மொழியை கற்றுக் கொண்டேன். உங்களோடு சேர்ந்து இதயத்தின் மொழியை பேசவும் புரிந்துகொள்ளவும் கற்றுக்கொண்டேன். உங்களுடைய தோழமையான நட்பு எனக்கு நிறைய வெளிப்படுத்தியது.
இதிலே ஒரு வேளை நான் வலிமை இல்லாது இருக்கலாம், ஆனால் நம்முடைய நட்பு நேரத்தையும், தூரத்தையும் பிரிவினையும் தாண்டியது. இது கடவுளிடமிருந்து, மீண்டும் கடவுளிடம் வழிநடத்த வந்தது என்பதை நான் நம்புகிறேன். இவருடைய ஆழ்ந்த உருவாக்கம் திருச்சபை பற்றிய இறையியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்நாள் வரை திருச்சபை கற்றுக் கொடுத்ததை மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அறிந்தார்.
இஸ்லாமியர் மத்தியில் தனித்துவத்தை காட்டுவதே அல்ல மாறாக நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாய், அருளான வேலைகளில் நாட்டிற்கு பணி செய்வதிலே திருச்சபை தன்னுடைய இருப்பை வெளிப்படுத்த வேண்டும்" என்று கூறினார். திருச்சபை தன்னுடைய செயல்களால் நற்செய்தியின் அன்பை மக்களுக்கு வெளிப்படுத்த முடியும் என்றார். இதுவே முன்னர் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக அமையும்.
திருச்சபையிலே, சாட்சிய வாழ்வும் தூய ஆவியாரின் செயல்களுமே மனங்களை மாற்றி கிறிஸ்துவுக்குள் சுதந்திரத்தை காண செய்ய முடியும். இதன் அடிப்படையிலே இவர் மறைமாவட்ட மையத்தில் அணுகுமுறையையும் கல்வியையும் கொண்டுவந்தார். பிற ஆயர்களோடு சேர்ந்து முஸ்லிம் உலகத்திலே கிறிஸ்தவத்தின் இருப்பு அதனுடைய பொருள் என்கின்ற ஒரு மடலை வரைந்தார்.
இவருடைய மறைமாவட்டம் வெகு சில கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் எல்லோருமே பல நாட்டவர்கள். உறவு நிலையை வளர்ப்பவர் ஆக இவருடைய பணியை பார்த்து இவர் வியப்படைந்தார், மகிழ்ச்சி அடைந்தார். கிறிஸ்தவர்களோடு மட்டுமல்ல பல ஊர்களை கொண்ட கிறிஸ்தவர்களோடு மட்டுமல்ல இஸ்லாமிய நண்பர்களோடும் திருச்சபையை ஒன்றிணைப்பது இதை இவர் முன்னெடுத்தார்.
தன்னுடைய மறைமாவட்ட சொத்துகளையும் கட்டிடங்களையும் மக்களுடைய வளர்ச்சிக்காக நுலகங்களாக, மக்களை வரவேற்கின்ற இடமாக ,நோயாளர்களை வரவேற்கின்ற இடமாக, பெண்களை பயிற்சி ஆக்குகின்ற இடமாக இருக்க திறந்து வைத்தார். இஸ்லாமிய ஒருங்கிணைப்பாளர்களோடு உறவு நிலையை ஏற்படுத்தி 1990 மாபெரும் மாற்றத்தை உறவு நிலையை கொண்டு வந்தார்.
கடவுள் மட்டுமே மனங்களில் மாற்றத்தை கொண்டுவர வல்லவர். கிறிஸ்தவ மக்கள் வெகுசிலரே என்றாலும் உண்மையான கிறிஸ்தவ சாட்சிய வாழ்வு ஒரு முஸ்லிம் மத்தியிலே மாபெரும் மாற்றத்தை கொண்டு வரும், இந்த சாட்சிய வாழ்வு அன்றாடம் வாழ வேண்டியது. 1988 ஆம் ஆண்டு பாரிஸின் உடைய தொழுகைக் கூடத்தில் இவ்வாறாக அவர் உரையாற்றினார், " றிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மத்தியில் இருக்கின்ற இந்த உரையாடல் ஓர் சடங்காக அல்லாது இருக்க வேண்டும். வேறுபாடுகளை பேசுவதாக அல்ல, திறந்த மனதோடு தடைகளை சுட்டிக்காட்டி, வரலாற்றை மீள்பார்வை செய்து, அடிப்படையில் இருக்கின்ற குறைகளை கண்டுபிடித்து, ஏற்றுக் கொள்வதாய் இருக்க வேண்டும் என்று கூறினார்.
உரையாடல் வார்த்தைகளாகவே இருந்து விடுகின்றது. பல நேரங்களில் புரியாமலும், சில நேரங்களில் தவறான நடத்துதலாகவும் அமைந்துவிடுகின்றது" என்றார். இவர் மக்களை இதிலே உள்வாங்கி கலந்துரையாடலை ஆழத்தை எடுத்துக்கொண்டார். நட்போடு நம்பிக்கையோடு தொடங்கப்படாத எதுவுமே நிலைத்து நிற்காது என்று ஆணித்தரமாய் கூறியவர். இதுவே மக்கள் தங்களுடைய பொதுவான அன்றாட சவால்களை சந்திக்க செய்யும் என்றார்.
கிறிஸ்தவர்கள் தங்களுடைய மூவொரு இறைவனுடைய நம்பிக்கை பல கடவுள் சம்பந்தமானது அல்ல என்பதையும் எடுத்துரைக்கவும், இஸ்லாமியர்கள் முகமது அவருடைய ஆளுமை தனத்தை கிறிஸ்தவர்களுக்கு வெளிப்படுத்துவதும், கிறிஸ்தவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட இந்த உரையாடலில் தேவையானது என்றார்.
இந்த சந்திப்புகள் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பயத்தையும் முன் தீர்மானங்களையும் விளக்குவதாகவும், காயங்களை ஆற்றுவதாகவும் இருக்கவேண்டும் என்றார். உண்மையான அறிவோடு ஆரோக்கியமான கலந்துரையாடல், உறவிலே ஆழத்தை கொண்டுவரும், விடுதலையை கொண்டுவரும், சாட்சிய வாழ்வை பிரசங்கிக்க செய்யும் என்றார்.
1990-களில் அல்ஜீரியா மீண்டும் ஓர் தாக்குதலுக்குண்டான காலகட்டத்திலே விழுந்தது. ஓர் அடிப்படைவாத குழு தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை அமைக்க இருந்த நேரத்தில், ராணுவம் உள்ளே நுழைந்து அடிப்படைவாதம் நாட்டையும் அமைதியும் சீர்குலைக்கும் என்பதனாலேயே அந்த தேர்தலை நடத்த விடாது நிறுத்தி விட்டதால், இவர்கள் அதிகாரத்தை கையில் எடுக்க வன்முறையை தூண்டினார்கள். அவர்கள் முதலில் நீதிபதிகளையும், காவல் அதிகாரிகளையும் சிறை படுத்தினார்கள். அதேபோன்று எழுத்தாளர்களையும் பத்திரிகையாளர்களையும் கொன்றார்கள். இறுதியாக பிற நாட்டவர்களையும் கொலை செய்ய முயன்றார்கள். இவர்கள் முதலில் இரண்டு கிறிஸ்தவ துறவிகளை கொன்றார்கள், 1994 மே மாதத்தில்.
1996இல் ட்ராபிஸ்ட் முனிவர்கள் எழுவரை கொண்டார்கள். அவர்கள் கொள்ளுவதில் நம் நாயகனே இறுதியானவர். இவர் அல்ஜீரியாவில் இருப்பதற்கு மட்டுமல்ல, தைரியமாக பலதரப்பட்ட, மனிதத்தை வேறுபடுத்தாத தனத்தை வெளிப்படுத்தவும் முடிவு செய்தார். இவர் இவ்வாறாக சொல்கிறார் "நாம் சரியான இடத்தில் இருக்கின்றோம். உலகம் மறுமலர்ச்சி பெறும் என்ற நம்பிக்கையோடு, உயிர்ப்பின் பேரொளி நம்மீது வீசுகின்ற இந்த இடத்தில் இருக்கிறோம்" என்று.
நம்பிக்கையையும், கடவுளுடைய ஆணித்தரமான உதவியையும், எதிர்காலம் மாறும் என்கிற நம்பிக்கையையும், உலகின் மீது கொண்ட நம்பிக்கையையும், இது எடுத்துக் காட்டுகின்றது. 1996 ஆகஸ்ட் ஒன்றிலேயே இவர் கொல்லப்பட்டார். இவரோடு சேர்ந்து ஓர் இஸ்லாமிய நண்பர் முஹம்மத் பவுஷிகி அவரும் கொல்லப்பட்டார். இந்த இஸ்லாமிய நண்பர் இவரோடு இருக்க, மரிக்க அவரே தேர்ந்து கொண்டார்.
நம் கதாநாயகர் அவருடைய மரணம் கிறிஸ்தவர்களை மட்டுமல்ல இஸ்லாமிய மக்களையும் அதிர்ச்சி அடைய செய்தது. அல்ஜீரியாவில் அவருடைய இறுதி பயணத்திலே நிறைய அல்ஜீரிய இஸ்லாமியர்களும் கலந்து கொண்டார்கள். அவர்கள் சொன்னார்கள் நாங்கள் 'எங்கள் ஆயருக்காக' அழுவதற்காக இங்கு வந்திருக்கின்றோம் என்று.
நாம் என்ன செய்யலாம்?
Add new comment