Radio Veritas Asia Buick St., Fairview Park, Quezon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
என் மக்கள்
இஸ்ரயேல் நடுவில் நான் இருக்கிறேன் என்றும், ஆண்டவராகிய நானே உங்கள் கடவுள் என்றும், என்னையன்றி வேறு எவரும் இல்லையென்றும் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்; இனிமேல் என் மக்கள் ஒருபோதும் நிந்தைக்கு உள்ளாக மாட்டார்கள்.
யோவேல் 2-27.
ஒருமுறை பாகாலை வழிபடும் பொய் இறைவாக்கினருக்கும் இறைவாக்கினர் எலியாவுக்கும் இடையே உண்மை கடவுள் யார் என நிரூபிக்கும் நிகழ்வு நடக்கிறது.
பொய் இறைவாக்கினர் பலிபீடத்தில், பலி பொருளையும் வைத்து கொண்டு காலை முதல் மாலை பலி நேரம் வரை தங்கள் கடவுளை கத்தி , கூவி அழைத்து, தங்கள் கை கால்களை கீறி கொண்டனர் . ஆனால் எந்த ஒரு அதிசயமும் நடக்க வில்லை
அதன்பிறகு எலியா எல்லா மக்களையும் அருகில் வர சொன்னார். அங்கே இடிந்து கிடந்த ஆண்டவரது பலிபீடத்தை சரி செய்கிறார். பன்னிரு கற்களை கொண்டு ஆண்டவர் பெயரில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, அப்பலி பீடத்தைச் சுற்றிலும் இரண்டு உழவுகால் அகலம் உள்ள வாய்க்காலை வெட்டினார்..அதன்பின் விறகுக் கட்டைகளை அடுக்கி, காளையைத் துண்டு துண்டாக வெட்டி, அவற்றின் மேல் வைத்தார்.நான்கு குடங்கள் நிறைய தண்ணீர் கொண்டு வந்து, எரிபலியின் மேலும் விறகுக் கட்டைகளின்மேலும் ஊற்றுங்கள்” என்றார். . மூன்று முறை அப்படியே செய்தனர்.
தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடியது. வாய்க்காலை அவர் தண்ணீரால் நிரப்பினார்.
இறைவாக்கினர் எலியா பலிபீடத்தின் அருகில் வந்து ஜெபிக்கிறார். அவர் கத்தி ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. தன்னை கீறி கொள்ளவில்லை . கடவுளாகிய ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மீண்டும் மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறியும்படி எனக்குப் பதில் தாரும்! ஆண்டவரே எனக்குப் பதில் தாரும்!” என்றார்.
.உடனே ஆண்டவரின் நெருப்பு கீழே இறங்கி அந்த எரிபலியையும், விறகுக் கட்டைகளையும், கற்களையும், மணலையும் சுட்டெரித்து வாய்க்கால் நீரையும் வற்றச் செய்தது.
எலியா ஆண்டவரை நம்பினார். அமைதியாக தடுமாற்றமின்றி சிறு ஜெபம் சொன்னார். அவர் நிந்தைக்கு ஆளாக வில்லை. வெட்கமடையவில்லை. நாமும் ஆண்டவரை நோக்கி ஜெபிப்போம். நமக்கு தேவையானதை ஆண்டவர் செய்வார் . நாம் அவமானப்பட விடமாட்டார் . நாம் வழி படும் கடவுள் உண்மை கடவுள். அவருக்கு நிகரானவர் யாருமில்லை.
ஜெபம் :. ஆண்டவரே, எனக்காக நிந்தை அனுபவித்து சிலுவை சாவு வரை உம்மை தாழ்த்தியவரே,. உம்மை போற்றுகிறேன். நான் ஒருபோதும் நிந்தை அடைய நீர் விடமாட்டீர். ஓடிவந்து என்னை காப்பாற்றும் இறைவனே உமக்கு நன்றி. உயிருள்ள கடவுளே உமக்கு நன்றி .ஆமென்.
Add new comment