இறை உறவில் - நம்புகிறீர்களா

அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” என்று கேட்டார். .

மத்தேய 9-28.

நம்பிக்கை என்பது, ஆண்டவரை முற்றிலும்  சார்ந்து கொள்ளுவதாகும். ஆழமான நம்பிக்கை. முழுவதுமாக  அர்ப்பணிப்பு . இறுதிவரை உறுதியாக இருக்கும் தன்மை.

 இயேசு நம்மை  இருகரம் நீட்டி அழைக்கிறார்.  நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது நம் கண்களைப் பதிய வைப்போம். அவர் நமக்கு வரும் எல்லாவற்றையும் பார்த்து கொள்வார். வெற்றியின் பாதையில் நடத்தி செல்வார்.

 இன்று இயேசுவின்மேல் வைக்கும் நம்பிக்கை நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் முன்னேறி நிலை வாழ்வை நமக்கு தரும்.

திருத்தூதராகிய பவுல் தமஸ்கு நகர் வீதியிலே விழுந்து கிடந்தபோது, ஆண்டவரே, நீர் யார்? என்று கேட்டு , அவரை அறிந்து அவர்மேல் நம்பிக்கை  வைத்தார். அவர் இயேசுவின் மேல் வைத்த அன்பினால் எண்ணற்ற அற்புதங்களைச் செய்தார். நற்செய்தியை பரப்பினார். திருமுகம் எழுதினார். இறுதியில் "நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் என்று கூறுகிறார்.

யோபு போல என்ன நடந்தாலும் ஆண்டவரை பற்றிக்கொள்ளும் மனம்,  ஆபிரகாம் போல ஆண்டவர் வார்த்தைக்கு கீழ்பணியும் விசுவாசம் நமக்கு இருக்க வேண்டும்.

ஜெபம்:. ஆண்டவரே, உம்மை நாங்கள் நம்புகிறோம்.எங்கள் பலவீனத் திலும்,  இயலாமையிலும் எங்களுக்கு துணையாக வாரும். அணைகடந்த உமது அன்பில் நம்பிக்கை வைத்து , அதில் நிலைத்து நின்று, நிலை வாழ்வை அடைய அருள் தாரும். ஆமென்

Add new comment

13 + 2 =