சின்னச் சின்ன ஆசை…    சிகரம் தொடும் ஆசை…B.J. மில்லர் (BJ Miller)

 வலி நிவாரண அல்லது நோய் தணிப்;பு கவனிப்பு மருத்துவராக (Palliative Care Physician), சென் நலவாழ்வு திட்டத்தின் நிர்வாக இயக்குனராக வாரத்திற்கு ஏறக்குறைய 70 அல்லது 80 மணிநேரம் வேலைசெய்கின்ற இவர், அமெரிக்காவில் கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலுள்ள நோயாளிகளையும், சான் பிரான்சிஸ்கோவின் ஹெலன் டில்லர் குடும்ப உணர்வாற்றல் சார்ந்த புற்றுநோய் மையத்திலுள்ள (Helen Diller Family Comprehensive Cancer Centre) நோயாளிகளையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்.

நோயாளிகளின் உடல் மன வேதனைகளுக்கு மருந்தளிக்கும் மருத்துவராகவும் துணையாளராகவும் உடன் பயணித்துக்கொண்டிருக்கின்றார். எத்தனையோ நபர்கள் இப் பணியைச் செய்துவருகிறார்கள். ஏன் நீங்கள் கூட நாளை இப் பணிக்கென அழைக்கப்படலாம். அப்படின்னா எதுக்கு இவங்களப் பத்தி தெரிஞ்சுக்கணும்... அவருக்கு அப்படியென்ன சிறப்பு!!!

1993-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அது (22 ஆண்டுகளுக்கு முன்னர்) பிரின்ஸ்டன் நகரில் தமது கலை அறிவியலில் இரண்டாம் ஆண்டு இளைநிலை பட்டத்திற்காக படித்துக்கொண்டிருந்த மில்லர்; தன்னுடைய நண்பர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிது தூரம் செல்லும் ரயிலின் மேல் சாவாரி செய்தபோது 11000 வாட் மின்சாரம் இவரது இடது கையில் அணிந்திருந்த கடிகாரம் மூலம் பாய்ந்தது. உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில் தூக்கி ஏறியப்பட்ட இவர் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

தனது இரண்டு கால்களையும், இடது கையையும் இழந்துவிட்டநிலையில் அவர் தாங்க இயலாத உடல் மனவேதனைகளை அனுபவித்தார். வாழ்வே கேள்விக்குறியானது. வாழ்வின் இலக்கு எட்டா கனியானது. வாழ்க்கையின் திசை ஓட்டம் மாறியது. இருந்தபோதிலும் வாழ்க்கையைத் தொடர்ந்தார். புதுமையாய் புதிய வழியில் புதிய அத்யாயம் நோக்கிப் புறப்பட்டார். வாழ்வின் விளிம்பில் இருக்கும், கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் நோயாளிகள் வாழ்வையும் சாவையும் சரிவரப் புரிந்துவாழ, மனநிறைவுடன் இறப்பைச் சந்திக்கக் கற்றுக்கொடுத்தார். 

அந்த மறக்கமுடியாத இரவைப் பற்றி அவரிடம் கேட்டபோது: எனக்கு அதிகம் நினைவுக்கு வரவில்லை. அதிமிகு விளக்கு வெளிச்சம் தன் முகத்தின் முன் வந்துபோனது. ஒரு ஹெலிக்காப்டர் என் உடலைத் தூக்கிச்சென்றது. நான் ஒரு வாரம் கழித்து எழுந்தபோது ஏதோ கெட்ட கனவிலிருந்து எழுந்ததுபோல என் கைகளில் பொருந்தியிருந்த அனைத்து குழாய்களையும் பிடிங்கிவிட்டு படுக்கையிலிருந்து குதித்திறங்கினேன். தரையில் விழுந்தேன். அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது அது கெட்ட கனவல்ல, கொடூரமான நிஜம். எந்த இளைஞனாலும் எதிர்பார்க்கமுடியாத எதார்த்தம்... 

எனக்கு ஏன் இப்படி நிகழ்ந்து என்றோ அல்லது உடலில் ஏற்பட்ட காயங்களை நினைத்தோ நான் வருந்தவில்லை. ஏனென்றால் மிக அதிகமான நல்ல விசயங்கள் அந்த விபத்திலிருந்து வெளிப்பட்டிருக்கின்றன. நான் என் வாழ்வில் மருத்துவத்துறையை நினைத்ததே இல்லை அதுவும் நோய் தணிப்பு கவனிப்பு மருத்துவராவேன் என்பது என் சிந்தையை எட்டியதே இல்லை. இந்த அனுபவம்தான் என் வாழ்வின் திசையை மாற்றியது. 

என்னுடைய தாயும் போலியோ நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர். அத்தகைய நிலையிலும் எங்களை நல்ல முறையில் வளர்த்தெடுத்தார். எனவே ஊனம் என்பது நல்வாழ்விற்கு தடையல்ல என்பதை சிறு வயதிலேயே நான் அறிந்திருந்தேன், அனுபவித்திருக்கின்றேன். 

இப்பொழுது எனக்கு புதிய உடல் கிடைத்துள்ளது. இது எண்ணில் பல மாற்றங்களை உருவாக்கியிருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல், மற்றவருடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து நொந்துகொள்ளாமல், நிகழ்காலத்தை அலங்கரிக்கக் கற்றுக்கொடுத்திருக்கிறது. ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. அதற்காக நான் மிகவும் நன்றியுணர்வுடன் இருக்கின்றேன். இன்று மகிழ்ச்சியோடு மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருந்து வாழ்ந்து வருகிறேன் என்றார். 

எனக்குள் எழுந்த கேள்விகள்:
  இரண்டு கால்களையும் ஒரு கையையும் இழந்தபோதும் இவரால் மகிழ்ச்சியாக இருக்கமுடிகிறது, சாதிக்க முடிகிறது என்றால்... ஏன் என்னால்?

  இலக்கை அடைய காலத்தையும் நேரத்தையும் தனது கட்டுப்பாட்டில் இவரால் கொண்டுவர முடிகிறது என்றால்... ஏன் என்னால்?

  எந்த நிலையிலும் மற்றவர்களுடன் தன்னை ஒப்பிடாமல் தனது தனித்தன்மையோடு சாதனையாளராக உருவெடுக்க இவரால் முடிந்தது என்றால்... ஏன் என்னால்? (எல்லாவற்றிற்கும்           மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நான்).

 பெரிய தடைகளைக் கூட பளபளக்கும் படிக்கட்டுகளாக இவரால் மாற்றமுடிந்தது என்றால்... ஏன் என்னால்? (சிறு தடைகள் வந்தபோது வாழ்வே இழந்ததுபோன்று வாழ்வை       வீணடிக்கும் நான்).

    தான் நினைத்தது எதிர்பாராதவிதமாக கிடைக்காமல் போனபோது புதிய பாதைகளில் பயணிக்க இவரால் முடிந்தது என்றால்.... ஏன் என்னால்?

நல்லவைகள் கற்றுத்தந்த B.J. மில்லர் நம் வாழ்வின் பாடம்.

சிகரம் தொலைவில் இல்லை,
வேரித்தாஸ் தமிழ்ப் பணி
 

Comments

Beautiful

Add new comment

10 + 1 =